உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியமாக கருதினால் நிச்சயம் அவை நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.குறிப்பாக கைகளில் வலி இருந்தால் அவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.கைகளில் பெருவிரல்,ஆல்காட்டி விரல்,மோதிர விரல்,சுண்டு விரல்,நடுவிரல் என்று ஐவகை விரல்கள் இருக்கிறது.
இதில் எந்த விரலில் அடி,காயம்,அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.நமது கைகளில் நரம்பு பிடிப்பு,வாதம்,நோய் தொற்று,காயங்கள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வலி,வீக்கம் உண்டாகலாம்.
கை விரல்களில் எலும்பு முறிதல்,கை நரம்பு பிடிப்பு,கால்வாதம்,முடக்கு வாதம் போன்ற காரணங்களால் வலி ஏற்படலாம்.அதேபோல் வைட்டமின் குறைபாடு காரணமாகவும் வலி ஏற்படும்.
கணினி,மடிக்கணினி ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் கை விரல்களில் அதிக வலி ஏற்படும்.
கைவிரல் வலிக்கான அறிகுறிகள்:-
1.விரல்களில் உணர்வின்மை
2.கை பலவீனம்
3.கூர்மையான ஊசி குத்தல் உணர்வு
4.கை மூட்டுகளில் எரியும் உணர்வு
5.மூட்டு விறைப்பு
6.கைகளில் கூச்ச உணர்வு
கைவிரல் வலி குணமாக்க வழிகள்:
**முதலில் கைக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும்.வேலைகளுக்கு நடுவே கைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
**ஐஸ் பேக் மற்றும் ஹாட் பேக் ஒத்தடம் கொடுத்தால் கை வலி முழுமையாக குணமாகும்.கைகளுக்கு அதிக வலி கொடுக்கும் வேலையை தவிர்க்க வேண்டும்.
**புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
**வைட்டமின் டி,வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.