எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும்!!! பிரபல நடிகை கியாரா அத்வானி பேட்டி!!!

Photo of author

By Sakthi

எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும்!!! பிரபல நடிகை கியாரா அத்வானி பேட்டி!!!

Sakthi

எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும்!!! பிரபல நடிகை கியாரா அத்வானி பேட்டி!!!

எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகத் தான் செய்ய வேண்டும் என்று பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அவர் கதை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி அவர்கள் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். நடிகை கியாரா அத்வானி அவர்கள் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சென்டர் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இதையடுத்து சினிமா பயணத்தில் தன்னுடைய 10வது ஆண்டை நடிகை கியாரா அத்வானி அவர்கள் கடந்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கியாரா அத்வானி அவர்கள் கதையை தேர்வு செய்யும் யுத்தி பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நடிகை கியாரா அத்வானி அவர்கள் “எனக்காக கதை எழுதி என்னுடைய கால் ஷீட்டுக்காக காத்திருப்பவர்களை நினைக்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நிலையில் நான் அனைவரும் எழுதிக் கொணடு வரும் கதையை தேர்வு செய்ய மாட்டேன். கதை தேர்வு செய்வதில் நான் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்.

சினிமாவில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் ஒன்றும் கிடையாது. அதை மிகப்பெரிய சாவாலக பார்க்கின்றேன். எனவே நான் நடிப்பதற்கு உரிய கதையை நான் தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் இருக்கின்றேன்.

எனக்காக கதை எழுதி கொண்டு வரும் நபர்கள் கதை கூறும் பொழுது அது உணர்ச்சிபூர்வமான கதையா? இல்லையா என்பதை முன்னரே யோசிப்பேன். ஒரு திரைப்படம் என்றால் பலருடைய உழைப்பு, முதலீடு, முயற்சி முதலியவை இருக்கும். இதனால் இவை அனைத்தையும் யோசித்துதான் நான் முடிவு எடுக்க முடியும்.

எந்த ஒரு செயல் செய்தாலும் அதை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்து தான் நான் கதை தேர்வு செய்வதில் முடிவு எடுக்கின்றேன். எனக்கும் என்னுடைய கணவர் சித்தார்த் அவர்களுக்கும் சினிமாவில் ஒரு நல்ல பெயர் இருக்கின்றது. அதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதை நினைவில் வைத்தே கவனமாக கதைகளை தேர்வு செய்கின்றேன்” என்று கூறியுள்ளார்.