எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!

0
154
Whatever you do, plan and do it!! Or jail?!
Whatever you do, plan and do it!! Or jail?!

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் இவர்கள் மூன்று பேரும் பனியன் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். பிரபாகரன்,ராஜா,மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் நேற்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்நிலையில்  அதிகாலையில் ராஜா குளிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர் ஒருவர் கதவை திறந்தபடி வெளியே செல்வதை கண்ட ராஜா தன் நண்பர்களை எழுப்பி இதை பற்றி கூறியுள்ளார். பின்னர் மூன்று பேரும் சேர்ந்த மர்ம நபரை துரத்தி சென்றுள்ளனர். வெகு தொலைவு சென்று விட்டதால் ஓட முடியாமல் மூச்சுத்திணறி அங்கேயே அமர்ந்த அந்த நபரை மூன்று பேரும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

காவல்துறையினர்  வழக்கு பதுவு செய்து விசாரணை செய்தார்கள்.அப்போது  இவருடைய வயது 20 என்பதும் , முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மூணு செல்போன்களையும் திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து இளங்கோசபரியை கைது செய்து போலீசார் கோர்ட்டில்  ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous articleகன்னியாகுமரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை! இதுதான் காரணமா?
Next articleபாமக தலைமையில் புதிய கூட்டணி? அன்புமணி ராமதாஸ் தெரிவித்த பரபரப்பு தகவல்