கொரோனா பற்றிய காலகட்டத்தில் மிக அளவு கொரோனா தாக்கமானது நகர்ப்புறங்களில் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் குறைந்த அளவு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான முடிவுகள் வெளியாகி புதிய விதமான தகவல்களை வழங்கியுள்ளது.
புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது :-
2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பல கோடிக்கணக்கான மக்களின் உயிரை கொன்றது. இந்தியாவிலும் பல கோடி உயிர்களை வாங்கிய கொரோனா தொற்று கிராமப்புறங்களில் குறைவாகவே இருந்தது ஆய்வுகளில் வெளிவந்துள்ளது. நகர்ப்புறங்களுக்கும் கிராம புறங்களுக்கு என்ன வித்தியாசம் எதனால் கொரோனா தொற்றானது கிராமப்புறங்களில் குறைவாக காணப்பட்டது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.
கிராமப்புறங்களில் கழிவறைகள் வீடுகளில் இல்லாமல் இருப்பதே கொரோனா தொற்று பரவலை பெருமளவு குறைந்திருப்பதாகவும் நகர்ப்புறங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே கழிவறைகளை பயன்படுத்தியதால் கொரோனா தொற்று அதிகரித்து உயிரிழக்கும் அதிகரித்து இருப்பது ஆய்வு முடிவில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக வெளியாகி இருக்கிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளில் கழிவு நீர் வெளியேற்றப்படக்கூடிய பைப் , கழிவுநீர் வடி கால் போன்றவற்றில் கொரோனா தொற்று அதிக அளவில் காணப்படுவதற்கான வாய்ப்புகளும் அவை பரவி மற்றவர்களுக்கும் கொரோனா தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிராமப்புறங்களில் திறந்தவெளிகளை கழிவறைகளாக பயன்படுத்துவதால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் மற்றும் கொரோனா தொற்று உயிரிழப்பு போன்றவை குறைவாக இருந்ததாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.