வாட்ஸ்அப் செயலியானது தனது பயனர்களுக்கு அவ்வப்போது நோட்டிபிகேஷன்களை தந்து பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
சந்தேகத்திற்கு இடமின்றி தற்போதுள்ள பயனர்களுக்கு வாட்ஸ்அப் அதனுடைய டிஜிட்டலில் வலிமையை காமித்து வருகிறது. அத்துடன் அத்தகைய அறிவிப்பை சரியான நேரத்தில் நோடிஃபிகேஷன் மூலம் அவர்களுக்கு அனுப்பி பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
வியாழக்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் தனது புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கை அதாவது பிரைவசி பாலிசியை பயனாளர்களிடம் இருந்து ஒப்புதல் வாங்குவதற்காக அவ்வப்போது சரியான இடைவெளிகளில் நோட்டிபிகேஷன் களை தந்து அதை பயனர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக தந்திர முறையில் செயல்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
2021 புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத பல மில்லியன் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தினசரி அடிப்படையில் அறிவிப்புகளை அனுப்பி வருகிறது.
டெல்லி அரசானது பயனர்களை கவரும் விதமாக அடிக்கடி நோட்டிபிகேஷன்களை பிளாஸ் செய்து வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஒப்புதல் அளிக்கும் விதமாக அவர்களை கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.
இது ஒரு திட்டமாக இருக்கிறது. அதாவது பாதுகாப்பு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பே புதுப்பிக்கப்பட்ட 2021 தனியுரிமைக் கொள்கையில் பயனர்களை முழுவதையும் மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வாட்ஸ்அப் செயல்படுவதாக அரசு கூறியுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதை தடுக்க நீதிமன்றத்திலிருந்து உத்தரவுகளை நாடி, வாட்ஸ் அப்பின் நடவடிக்கைகள் மார்ச் 24 இந்திய போட்டி ஆணையத்தில் உத்தரவின் படி முதன்மையான கருத்துக்கு எதிராக வாட்ஸ்அப் உள்ளது என அரசாங்கம் வாதிட்டது.
வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கை 2011 ஐடி விதிகளை மீறுவதாகவும், யூனியன் அரசாங்கம் மார்ச் மதத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் செய்தியிடல் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதை தடுக்குமாறு வலியுறுத்தியது..
பல்வேறு சமூக வலைத்தளங்களில் மற்றும் செய்தியின் பயன்பாடுகள் சேகரிக்கப்பட்ட பயனர்களின் தனியுரிமை டேட்டாவை பாதுகாக்க வேண்டும். எனவே அதன் வழிகாட்டுதல்களை வடிவமைக்க கூறும் ஒரு பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன.