“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
103
#image_title

“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இட்லி பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு இட்லி பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.பொதுவாக இட்லி செய்வதற்கு அரசி,உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து ஆட்டி அதை புளிக்க என்று இத்தனை வழிகளை கடிப்பிக்க வேண்டி இருக்கு.ஆனால் அரிசியோ,உளுந்தோ இல்லாமல் 20 நிமிடத்தில் இட்லி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வெறும் 20 நிமிடத்தில் கோதுமை மாவு வைத்து இட்லி செய்வது எப்படி என்பது குறித்த முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கோதுமை மாவு – 2 கப்

*கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

*உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*இஞ்சி – சிறு துண்டு

*கருவேப்பிலை – 1 கொத்து

*கேரட் -1

*கொத்தமல்லி இலை -சிறிதளவு

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*தயிர் – 1/2 கப்

*பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் அடுப்பில் கடாய் வைத்து கோதுமை மாவை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.வேண்டும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெயை ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பை சேர்த்து சிவக்கும் வரை பொரிய விடவும்.பிறகு கடுகு மற்றும் சீரகம் சேர்க்க பொரிந்த பிறகு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.அதோடு கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து வதக்கவும்.

பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஆற வைத்துள்ள வறுத்து ஆற வைத்துள்ள கோதுமை மாவை சேர்க்கவும்.அதோடு தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும்.

பிறகு புளிக்காத தயிர் 1/2 கப் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.பிறகு வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்த வந்த பிறகு இட்லி தட்டில் கோதுமை மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வேக வைக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து இட்லியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

இந்த கோதுமை இட்லிக்கு தக்காளி சட்னி,கடலை சட்னி,காரச் சட்னி,தேங்காய் சட்னி,புதினா சட்னி உள்ளிட்டவை சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleதலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..
Next articleஅதிக மருத்துவ குணங்கள் கொண்ட “முருங்கை பூ” பொரியல்!! வாரம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்வது அவசியம்!!