என்னது இத்தனை நாளாக நல்லது என்று நினைத்த கோதுமை.. மாதாவை விட கெடுதல் நிறைந்ததா?

Photo of author

By Divya

என்னது இத்தனை நாளாக நல்லது என்று நினைத்த கோதுமை.. மாதாவை விட கெடுதல் நிறைந்ததா?

Divya

உலகளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தானியமாக கோதுமை உள்ளது.கோதுமையில் செலினியம்,நார்ச்சத்து,மாவுச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.தவிடு நீக்கப்பட்ட கோதுமையை அரைத்து சப்பாத்தி,பூரி போன்ற வித விதமான உணவுகள் தயாரித்து உண்ணப்படுகிறது.

உடல் எடை குறைக்க,சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கோதுமை தானியத்தை உணவாக உட்கொள்ளலாம்.கோதுமையில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.முழு கோதுமையை உடைத்து கஞ்சி செய்து பருகி வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சம்பா கோதுமை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வைட்டமின் ஈ,செலினியம்,நார்ச்சத்துக்கள் கோதுமையில் அதிகம் நிறைந்துள்ளன.இருப்பினும் கோதுமையில் நம்ப முடியாத அளவு தீமைகள் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மைதாவை ஒப்பிடுகையில் கோதுமை தான் உடலுக்கு நல்லது என்பது பலரின் கருத்து.ஆனால் உண்மையில் மைதாவை போன்றே கோதுமையிலும் உடலுக்கு கெடுதல் தான் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கோதுமையில் இருந்து தான் மைதா,ரவை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.கோதுமை தவிட்டை மைய்ய அரைத்தால் மைதா மாவு கிடைக்கும்.அதுவே கோதுமை தவிட்டை கரடுமுரடாக அரைத்தால் கிடைக்கும் நடுத்தர பகுதி ரவை.கோதுமை தானியத்தை அரைத்தால் கிடைப்பது ஆட்டா மாவு.

கோதுமை மாவு ஊட்டச்சத்துக்கள்:

1)புரதம்
2)இரும்புச்சத்து
3)நார்ச்சத்து
4)வைட்டமின் பி
5)தாதுக்கள்
6)கார்போ ஹைட்ரேட்

மைதாவில் நார்ச்சத்து என்பது மிகவும் குறைவு தான்.மைதா உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமே முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.இளம் வயதில்
செரிமானப் பிரச்சனை ஏற்படக் காரணம் மைதா உணவுகள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

100 கிராம் கோதுமை,மைதா மற்றும் ரவையில் உள்ள மாவுச்சத்து:

கோதுமை: 66 கிராம்
ரவை: 75 கிராம்
மைதா: 78 கிராம்

இதில் ரவை மற்றும் மைதாவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாவுச்சத்து உள்ளது.கோதுமை மைய்ய அரைக்கும் பொழுது அதிலும் மாவுச்சத்து அதிகரிக்கிறது.இதனால் கோதுமை,மைதா மற்றும் ரவையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாவுச்சத்து தான் இருக்கிறது.

100 கிராம் கோதுமை,மைதா மற்றும் ரவையில் உள்ள நார்ச்சத்து:

கோதுமை: 7 கிராம்
மைதா மற்றும் ரவையில் நார்ச்சத்து கிடையாது.நாம் நல்லது என்று எடுத்துக் கொள்ளும் கோதுமை சப்பாத்தியை அதிகமாக சாப்பிட்டால் அது நமக்கு கெடுதல் விளைவித்துவிடும்.முழு கோதுமையை உடைத்து பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை.அதுவே நன்றாக அரைத்து மாவாக பயன்படுத்தினால் அது மைதா,ரவை போன்றே உடலுக்கு ஆபத்தாக மாறிவிடும்.