தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்?  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!…

0
256
When can the national flag be flown? A sudden notification issued by the Ministry of Home Affairs!...
When can the national flag be flown? A sudden notification issued by the Ministry of Home Affairs!...

தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்?  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!…

நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில்இன்றைய கால கட்டத்திலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து  வீடு தோறும் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசியக்கொடியை காலை 7.30 மணிக்கு ஏற்ற வேண்டும். அதே போல் மாலை 6:00 மணிக்குள் இறக்கி விட வேண்டும். தேசியக் கொடியை கைகளால் காதி துணியில்தான் தயாரிக்க வேண்டும்.மேலும் இவற்றின் விதிமுறைகளை அரசு மாற்றம் செய்துள்ளது.

மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்.

இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆனா தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம். வரும் ஆகஸ்டு 15ல் அனைத்து பள்ளிகள்,கல்லுாரிகள்,அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

Previous articleகள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!
Next articleவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா!