இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

Photo of author

By Savitha

சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரமன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் அவர் வீட்டுக்கு வெளியே இருசக்கர ((Honda Activa – brown colour – TN09CD0252)) வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த பொழுது அந்த வாகனம் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது, என் மனைவியின் அக்கா மகள் என் மனைவியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அவர் எப்பொழுதும் ஒரு ஸ்கூட்டரில் வருவார்.

வீட்டின் கேட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு வந்தார். வாட்ச்மேன் அப்பொழுது கேட்டுக் உள்ளே இருந்ததால் அவரும் அதை கவனிக்கவில்லை.

இரண்டு இளைஞர்கள் முகத்தை மூடிக்கொண்டு அந்த இரு சக்கர வாகனத்தை திருடி உள்ளனர். இது அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.