உங்கள் உதடு எப்பொழுது வறண்டு காணப்படுகிறதா? இதை சரி செய்ய ரோஜா இதழ் போதும்!!

Photo of author

By Gayathri

உதடுகள் அழகாக மிருதுவாக மாற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:

1)பால்
2)ரோஜா இதழ்

செய்முறை:

முதலில் ஒரு ரோஜா பூவின் இதழ்களை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 50 மில்லி பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த ரோஜா பேஸ்டை போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

பிறகு இதை ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு ப்ரீசரில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு வைத்தெடுக்கவும்.இப்படி செய்தால் லிப் பாம் ரெடியாகிவிடும்.

இந்த லிப் பாமை உதடுகளுக்கு அப்ளை செய்து வந்தால் வறட்சி,வெடிப்பு நீங்கி உதடுகள் மென்மையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)கேரட்
2)சர்க்கரை

செய்முறை:

ஒரு முழு கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு இதை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சர்க்கரை மற்றும் தயார் செய்து வைத்துள்ள கேரட் க்ரீம் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து உதடுகளுக்கு அப்ளை செய்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் சாப்டாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1)பீட்ரூட்
2)தேன்

செய்முறை:

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து பாத்திரம் ஒன்றை எடுத்து பீட்ரூட் சாறை வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.பீட்ரூட் பேஸ்ட் கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கிடவும்.பிறகு இதை ஆறவிட்டு இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும்.

இந்த பீட்ரூட் லிப்பாமை உதடுகளுக்கு அப்ளை செய்து வந்தால் மிருதுவாகவும்,அழகாகவும் மாறும்.