கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!

Photo of author

By Savitha

கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!

Savitha

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் இறந்த நிலையில் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவ முறையில் அனுமதி.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், தாமரசர்லா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 23 பேர் ஒரே ஷேர் ஆட்டோவில் ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டத்திலுள்ள குரஜாலா பகுதியில் கூலி வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். குண்டுகல என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோவில் பயணித்த ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 7 பேர் தீவிர காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர். இதனை கண்ட பொதுமக்களுடன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.