பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

Photo of author

By Gayathri

பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

Gayathri

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள்.

விருதுகளின் நிராகரிப்பு மற்றும் காரணம் :-

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி அரசாங்கத்திடமிருந்து எந்த வகையான விருதுகளையும் பெற்றுக் கொள்வதில்லை என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் உறுதியுடன் இருப்பதாக புத்ததேவ் தெரிவித்திருக்கிறார். மேலும் இக்கட்சியின் உடைய மூத்த தலைவர் ஆன டிஎம்எஸ் நம்பூதிரி பாட் அவர்களும் பத்ம விருதுகளை வாங்க மறுத்ததை சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் 80 ஆண்டுகளாக மிகச் சிறந்த பாடகி என்ற பட்டம் பெற்ற பாடகி சந்தியா அவர்கள் தனக்கு வழங்கப்படக்கூடிய பத்மஸ்ரீ விருது தன்னை சிறுமைப்படுத்தும் செயலாக பார்ப்பதாகவும் இது தனி மனித கோபத்தை நியாயமென ஏற்று விருதினை நிராகரிப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கலைஞர்கள் அவர்களுடைய சகிப்புத்தன்மை குறித்து இந்த விருதுகளை நிராகரிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம், இந்த பத்ம விருதுகள் ஆனது வழங்குவதில் வெளிப்படை தன்மை உள்ளது என்று அரசு கூறினாலும் அதனை நடைமுறையில் நம்புவது என்பது அசாத்தியமாக உள்ளது என்று லக்ஷ்மணன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

கமலஹாசன் அவர்கள் விருதுகளை திருப்பிக் கொடுப்பது குறித்து தெரிவித்த கருத்து :-

2015 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய 61 வது பிறந்த நாளை கொண்டாடும்பொழுது விருதுகளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என ஆவேசமாக கேட்டிருக்கிறார்.