நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

0
146
#image_title
நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில்

விரைவில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர நடிகர் நாசர் உறுதியளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, லதா சேதுபதி, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், பருத்திவீரன் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னணி நடிகர்-நடிகைகள், நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசி நடிகர் நாசர் அவர்கள் விரைவில் புதிய கட்டிடம் கட்டத்திட்டமிட்டு உள்ளதாக கூறினார். 40 கோடி ரூபாய் பொருட் செலவில் புதிய கட்டிடம் கட்டப் பொதுக்குழுவில ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் நடிகர் நாசர் குறிப்பிட்டு பேசினார். பெரிய நடிகர்களிடம் நன்கொடை வசூலித்து கட்டிடம் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை, நிதி பற்றாக்குறையால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை எனவும் நடிகர் நாசர் வருத்தம் தெரிவித்தார்.

நடிகர் நாசர், நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான ஒரு புதிய பிரமாண்ட கட்டடம் கட்ட முழு முயற்சியுடன் செயலாற்றினாலும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இதையே கூறி வருவதாக சினிமா வட்டாரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.

Previous articleஇயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்
Next articleகண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!