இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்

0
38
#image_title

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்?

பாலசந்தரின் ஆஸ்தான நடிகை வாணிஸ்ரீ தான். அவர் இயக்கிய பல படங்களில் வாணிஸ்ரீ அவர்கள் நடித்துள்ளார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசனை வைத்து ‘தாமரை நெஞ்சம்’ என்னும் படம் மிக முக்கியமான ஒன்று. 1968ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில், ராதா என்னும் பெயரில் நடித்து, நடிப்பின் எல்லைக்கே சென்றிருப்பார். இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றது. வாணிஸ்ரீயின் நடிப்பை பார்த்த கே.பாலச்சந்தர், அடுத்த சில தன் படங்களிலும், வாணிஸ்ரீயையே நடிக்க வைத்தார். பாலச்சந்தரின், சிறந்த நடிகர்களின் லிஸ்ட்டில் வாணிஸ்ரீ அவர்களுக்கு என்றும் ஒரு இடம் உண்டு.

கன்னட திரையுலகிலும் வாணிஸ்ரீ நடிப்பின் மூலம் அசத்தினார். பிரபல கன்னட பட இயக்குனர் புட்டண்ணா கனகல், `டீச்சரம்மா’ என்னும் தலைப்பில் தமிழில் படமாக்கினார். இந்த படத்தில் ஜெய்சங்கர் ஹீரோ. சந்திரா என்கின்ற கதாபாத்திரமேற்று நடித்து அசத் தினார். சண்டை காட்சிகள் இல்லாமல், நடனக் காட்சிகள் இல்லாமல் அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்கு எழுத்தப்படாத சடங்குகள் போல் இருந்த சில மிகைப்படுத்தும் காட்சிகள் அனைத் தும் இல்லாமல், ஒரு பொழுதுபோக்குப் படத்தை எடுத்ததற்காக இயக்குநரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் என்று அப்போதைய சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. அன்றைய பத்திரிகைகள் அனைத்துலேயும் புட்டண்ணா கனகல் படம் பற்றிய செய்திகள்தான். வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.

எம்ஜிஆருடன் பிரபல மலையாள தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஏ.தாமஸ், எம்ஜி ஆரை வைத்து ‘தலைவன்’ (1970) என்னும் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் உஷா என்கின்ற பெயரில் எம்ஜிஆருக்கு ஜோடியாக வாணிஸ்ரீ நடித்தார். பணம் பற்றாக்குறை மற்றும் கால்ஷீட் சிக்கல்களை இப்படம் சந்தித்தது. ஆகையால், இப்படம் சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன. நல்ல கதைக்கொண்ட படமாக இருந்தும், எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்களுடன், வாணிஸ்ரீ பல படங்களில் நடித்தார். அதில் முக்கால்வாசி படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக, வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.

நடிகை வாணிஸ்ரீ போலவும், அவர்கள் காலத்து நடிகைகள் போலவும் இப்போதுள்ள நடிகைகளால் நடிக்க முடியாது என சினிமா விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

 

 

author avatar
Parthipan K