அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை ஓபிஎஸ் மற்றும் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இணைய சிறிதும் விருப்பமில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
ஆனாலும் ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேல் இடம் விரும்புவதால் அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்ததாகவும், ஆனால் அப்போது கூட எடப்பாடி பழனிச்சாமி அந்த பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனை தவிர்த்து கொடநாடு விவகாரம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை என்று பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபட்டு வருகிறது. அதோடு நெடுஞ்சாலை துறை ஊழல்கள், சம்பந்தி தொடர்பான ஊழல்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள காரணத்தால் தான் தன்னை காப்பாற்றுமாறு டெல்லி பாஜக தலைவர்களிடம் உதவியை நாடி எடப்பாடி பழனிச்சாமி சென்றதாகவும், ஆனால் எடப்பாடி மேலிடம் கைவிட்டு விட்டதாகவும் பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை உள்ளிட்ட இரு அறிக்கைகளும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவது முன்கூட்டியே அறிந்த விஷயம் தான் என்பதால்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற விவகாரத்தை பெரிதாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு நாளும் அது தொடர்பான நடவடிக்கைகளை ஈடுபட்டாலும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் தாக்கத்தை தடுத்து நிறுத்த இயலவில்லை. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை விட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தான் மிகப்பெரிய குடைச்சல் ஆக எடப்பாடி பழனிச்சாமிக்கு முன் நின்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பாஜக கைவிரித்து விட்ட நிலையில், வேறு வழியில்லாமல் ஓரளவு இறங்கி வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதாவது பன்னீர் செல்வத்திற்கு இணைப்பது செயலாளர் பதவியை தர இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்காக முக்கிய நபரிடம் பன்னீர் செல்வத்திற்கு தூதும் அனுப்பினாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் பன்னீர்செல்வம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் சமமான பதவிகள் அதன்படி தான் இத்தனை நாளும் இருந்துள்ளோம். அதே பதவிகளே நீடிக்க வேண்டுமே தவிர புதிதாக ஒன்றை கிளப்பக்கூடாது. முதலில் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்து உள்ள வழக்கு முடிவுக்கு வரட்டும் என்று பதிலளித்துள்ளாராம் ஓபிஎஸ்.
இறங்கி வந்தும் பலன் இல்லாமல் போய்விட்டது என்று நொந்து போய் இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதே போல தன்னிடம் இருக்கின்ற சில முக்கிய நிர்வாகிகள் பன்னீர்செல்வம் பக்கம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் காதுக்கு வந்ததால் கொதித்துப் போய்விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
தென்மண்டலத்தில் மட்டும் தான் இந்த சதி வேலை நடப்பதாக தெரிவித்தார்கள் தற்போது வட மாவட்டங்களிலும் அதிலும் மூத்த நிர்வாகிகளை இப்படி நடந்து கொண்டால் எப்படி என்று கொதித்துப்போய் விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. சமீபத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு ஏற்பட்டதிலிருந்து வட மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் லேசாக மாற்றம் காணப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.
அதோடு இரட்டை இலையை முடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சுக்களும் அவர்களை லேசாக நடுங்க வைத்து விட்டதாம். ஆகவே தான் பன்னீர்செல்வம் பக்கம் தூது அனுப்பி கொண்டிருக்கிறார்களாம். இவர்களை எப்படி தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்வது என்பதுடன் பன்னீர்செல்வத்தை எப்படி சமாதானம் செய்வது? பாஜகவின் சப்போர்ட்டை எப்படி பெறுவது? தன்னை சுற்றி வரும் நெருக்கடிகளை எப்படி சமாளிப்பது? என்று ஏகப்பட்ட சிக்கலில் எடப்பாடி பழனிச்சாமி பின்னாடி வருவதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒன்றிணைந்து அனேகமாக எடப்பாடி பழனிச்சாமி பணியை செய்துவிடும் சூழல் இருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.