2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு?

0
109

2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு?

வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றுடன் இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

தகுதிச் சுற்று போட்டியில், அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியை (இரண்டு முறை சாம்பியன்) சூப்பர் 12 போட்டியிலிருந்து வெளியேற்றியது.

ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 146 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. இதன் மூலம் தகுதிச் சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் இந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆகி ஆண்டுகளில் டேரன் சமி தலைமையில் இரண்டு முறை டி 20 கோப்பையை வென்றுள்ளது. பல திறமையான மேட்ச் வின்னிங் வீரர்களைக் கொண்டிருந்தாலும், சர்வதேச போட்டிகள் என்று வரும் போது வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்த முறை நிக்கோலஸ் பூரன் தலைமையில் உலகக்கோப்பைக்கு தயாரான வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றிலேயே வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.