அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!!
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மட்டும் விதிவிலக்கு அல்ல. இன்று நள்ளிரவு 12 மணி அளவில் செய்த ட்டுவீட்-ல் திராவிட கட்சிகளை சரம்மாறியக கேள்வி கேட்டுள்ளார்.
இந்நிலையில் கமலஹாசன் தனது ட்டுவீட்டர் பக்கத்தில் கேட்ட கேள்விகளாவது: “தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள், இனி எப்போது செய்வார்கள்?” என்று கேட்டார் .
இந்நிலையில் திராவிட கட்சிகளையும் மக்கள்ககளையும் பார்த்து கேட்டதாவது இது வரையில் குடிநீர் திட்டம் முதல் சாலைகள் சரி செய்யும் திட்டம் வரை ஒன்றுமே தமிழகத்தில் செய்துத் தரப்படவில்லை இவ்வளவு நாட்கள் என்னதான் செய்தது திராவிட கட்சிகள் என்று கேட்டு திராவிட கட்சிகளை கட்சிகளை வருதெடுத்தார் கமல்.