ட்ரெண்டாகும் #குஷ்பு தோசை..! மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

0
146

ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு ரோட்டோர கடைரையில் தோசை சுட்டது வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளதாலும், 4முறை ஸ்டாலின் வெற்றிப்பெற்ற திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் டாக்டர் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே குஷ்பு நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வரும் குஷ்புவை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் இசையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘வாக்களியுங்கள் தாமரைக்கு, வாய்ப்பளியுங்கள் உங்கள் சகோதரிக்கு’என கடும் வெயிலையும், கொரோனா தொற்றையும் கூட பொருட்படுத்தாமல் வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் குஷ்பு தனக்கான தனி முத்திரையை அரசியலில் பதிவிட்டு வருகிறார். தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் சிலர் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பங்கெடுத்தபடி வாக்குகளை திரட்டி வருகின்றனர். அதேபாணியை தற்பொழுது குஷ்புவும் கையில் எடுத்துள்ளனர்.

இன்று ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குஷ்பு, தெற்கு மாடவீதியில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் மொறு, மொறு தோசை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல வருட அனுபவம் வாய்ந்த தோசை மாஸ்டர்களையே பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு சூடான கல்லில் தண்ணீர் தெளித்து, அளவாக மாவை எடுத்து மொறு, மொறுவென குஷ்பு தோசை சுட்டது வைரலாகி வருகிறது.

author avatar
CineDesk