உடலில் எந்த இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்? என்ன எண்ணெய் பெஸ்டா இருக்கும்?

Photo of author

By Divya

உடலில் எந்த இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்? என்ன எண்ணெய் பெஸ்டா இருக்கும்?

Divya

நமது உடல் வலிமைக்கு எண்ணெய் மசாஜ் அவசியமானதாக உள்ளது.உடலுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் சூடு குறைவதோடு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.உடலில் என்ன இடத்தில் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மசாஜ் செய்ய வேண்டிய இடங்கள்:

1)தலை

நல்லெண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.தலை முடி உதிர்வு,தலை சூடு,கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் குறையும்.

2)தொப்புள்

தினமும் தூங்குவதற்கு முன்னர் தொப்புள் பகுதியில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்தால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் நரம்புகள் வலிமை அதிகரிக்கும்.

3)முழங்கால்

தினமும் விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய் கொண்டு மூட்டு பகுதியில் மசாஜ் செய்தால் வலி குறையும்.முழங்கால் வலி பிரச்சனை இருப்பவர்கள் எண்ணையை சூடாக்கி மூட்டு பகுதியில் ஊற்றி மசாஜ் செய்தால் வலி,வீக்கம் குறையும்.

4)முகம்

நம் முகத்தில் பாதாம்,ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம்.சரும சுருக்கம் நீங்குவதோடு இயற்கையான ஒரு பொலிவை முகத்திற்கு கொடுக்கிறது.

5)கால் பாதம்

இரவில் தூங்கும் போது கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

6)கை

கைகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்து வந்தால் கை வலி ஏற்படாமல் இருக்கும்.

7)கண்

விளக்கெண்ணையை கண்களை சுற்றி அப்ளை செய்து சிறிது நேரம் லேசாக தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் கண் வலி,கண் எரிச்சல்,கண் வீக்கம்,கண் சூடு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.