அறிமுகமான அதே வருடத்தில் அதிக படங்களில் நடித்த நடிகர் யார்?

0
234
#image_title

அறிமுகமான அதே வருடத்தில் அதிக படங்களில் நடித்த நடிகர் யார்?

நடிகர் பிரபு

1982 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சங்கிலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான அதே ஆண்டில் சங்கிலி படத்துடன் மொத்தம் 06 படங்களில் நடித்து அசத்தினார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று வெளியான “லாட்டரி டிக்கட்” என்ற படத்தில் நடித்தார்.

துரை இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று வெளியான “நலந்தானா” என்ற படத்தில் நடித்தார்.

தியாகராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று வெளியான “அதிசயப்பிறவிகள்” என்ற படத்தில் நடித்தார்.

ராம நாராயணன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று வெளியான “சின்னஞ்சிறுசுகள்” என்ற படத்தில் நடித்தார்.

கங்கை அமரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியான “கோழி கூவுது” என்ற படத்தில் நடித்தார்.

நடிகர் பாக்யராஜ்

1979 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “புதிய வார்ப்புகள்” படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பி.ஏ.பாலகுரு இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று வெளியான “கன்னி பருவத்திலே” என்ற படத்தில் நடித்தார்.

பாக்யராஜ் இயக்கி நடித்த “சுவர் இல்லாத சித்திரங்கள்” 1979 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று வெளியானது.

நடிகர் முரளி

அமீர் ஜோன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று வெளியான “பூவிலங்கு” என்ற படத்தில் நடித்தார்.

மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று வெளியான “இங்கேயும் ஒரு கங்கை” என்ற படத்தில் நடித்தார்.

அமீர் ஜோன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியான “புதியவன்” என்ற படத்தில் நடித்தார்.