திருவண்ணாமலையில் எந்தந்த நாட்களில் கிரிவலம் சென்றால் நல்லது!!

0
112
Which days in Thiruvannamalai should you go to Krivalam!!
Which days in Thiruvannamalai should you go to Krivalam!!

திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு  நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும் . உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல் , காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ  தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.  ஞாயிற்று கிழமை – சிவலோக பதவி கிட்டும் .

திங்கட்கிழமை  – இந்திர பதவி கிடைக்கும்

செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .

புதன் கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.

சனிக்கிழமை – பிறவிப்பிணி அகலும்.

அஷ்டமி – தீவினைகள் போகும்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு.

மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகளும் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால், கர்மவினை அகல்வதுடன் மோட்சமும் கிட்டும் என்று கூறியுள்ளார்.

‘தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவருக்கும் அருளும் இறைவா போற்றி!’

Previous articleமுன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு!! பற்றி எரியும் பஞ்சாப் மாநிலம்!!
Next articleஒப்பனிங் or மிடில் ஆர்டர்..பேட்டிங்கில் எந்த வரிசை !! கே எல் ராகுல் சொன்ன நச் பதில்!!