இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது உணவுப் பழக்க வழக்கங்களில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பாக இனிப்பு சுவை நிறைந்த பொருட்களை சர்க்கரை நோயாளிகள் தொட்டு கூட பார்க்கக் கூடாது என்று கூறுவார்கள்.ஆனால் சில வகை பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும் என்பது பலரும் அறியாத உண்மை ஆகும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த பழங்கள்
1)ஆப்பிள்
இதில் அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்திருக்கிறது.இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.
2)பேரிக்காய்
நார்ச்சத்து நிறைந்த பேரிக்காயே தினமும் சாப்பிடலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழம் இது.
3)ஆரஞ்சு
சர்க்கரை சத்து குறைவாக இருக்கும் ஆரஞ்சு பழத்தை பழமாகவோ,சாறாகவோ சாப்பிடலாம்.ஆரஞ்சு பழத்திற்கு இருக்கின்ற வைட்டமின் சி உடலை புத்துணர்வாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
4)அவகோடா
அதிகம் அறியாத அவகோடா குறைவான சர்க்கரை கொண்ட பழமாகும்.இப்பழத்தில் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் அதிகளவு இருக்கிறது.
5)பப்பாளி
செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு பப்பாளி சிறந்த தீர்வாக இருக்கிறது.இதில் இருக்கின்ற
வைட்டமின் பி,மெக்னீசியம்,பொட்டாசியம்,நார்ச்சத்துகள் உடலுக்கு தேவையான நன்மைகளை வழங்குகிறது.இப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தவையாக இருக்கிறது.
6)கிவி
குறைவான சர்க்கரை சத்து கொண்ட கிவி பழத்தை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.