நமது பாரம்பரிய உணவுகளான வரகு,தினை,குதிரைவாலி,ராகி,கம்பு,சோளம்,சாமை போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும்.கடந்த 30,40 வருடங்களுக்கு முன்னர் சிறு தானியங்களே பிரதான உணவாக இருந்தது.ஆனால் தற்பொழுது உணவுக் கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை யாரும் உட்கொள்வதில்லை.மாறாக உடலுக்கு கேடு தரும் உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர்.இதய நோய்,இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்பு,சர்க்கரை போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாக நாம் பின்பற்றும் உணவுமுறை இருக்கிறது.
நாம் நமது பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
1)கோதுமை
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கோதுமை உணவுகளை உட்கொள்ளலாம்.
2)சாமை
இதில் இரும்புச்சத்து,ஜிங்க்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த சாமை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு குணமாகும்.
3)கம்பு
உடல் சூட்டை தணித்து ஆரோக்கியமாக இருக்க கம்பு உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளலாம்.
4)சோளம்
உடல் வலிமையை அதிகரிக்க சோள உணவுகளை உட்கொள்ளலாம்.உடல் ஆரோக்கியத்தை சோள உணவுகள் மேம்படுத்துகிறது.
5)வரகு
உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் வரகு மூலம் நமக்கு கிடைக்கிறது.வரகு உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
6)கொள்ளு
சளி,இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாக கொள்ளு உணவுகளை உட்கொள்ளலாம்.
7)ராகி
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பட ராகி உணவு உதவுகிறது.
8)குதிரைவாலி
இரத்த கொதிப்பு,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.