முகம் வெள்ளையாகவும்,பொலிவாகவும் இருக்க வேண்டுமென்று பலரும் விரும்புகின்றனர்.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் சருமம் சார்ந்த பாதிப்புகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.
இளம் வயதில் சருமச் சுருக்கம்,கரும் புள்ளி,முகப்பரு போன்ற பாதிப்புகளால் முக அழகு குறைந்து விடுகிறது என்பது பலரின் மனக் குமுறலாக இருக்கிறது.சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முள்ளங்கி தீர்வாக அமைகிறது.
முகத்தில் உள்ள கருமை மறைந்து முகம் பளபளப்பாக மாற முள்ளங்கியில் பேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம்.
முள்ளங்கி பேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
1)முள்ளங்கி – ஒன்று(மீடியம் சைஸ்)
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
ஒரு மீடியம் சைஸ் முள்ளங்கியை தோல் நீக்கி விட்டு காய்கறி சீவல் பயன்படுத்தி சீவி வைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கவும்.இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் கொட்டி இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலக்கவும்.இதை முகம்,கழுத்து உள்ளிட்ட இடங்களில் அப்ளை செய்து பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்தால் பளபளப்பான சருமம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)முள்ளங்கி – ஒன்று
2)ஆலிவ் ஆயில் – 5 சொட்டு
3)எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
ஒரு மீடியம் சைஸ் முள்ளங்கியை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
பிறகு அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஐந்து சொட்டு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும்.இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்தால் கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.