White Hair Problem? 5 நிமிடத்தில் நரைத்த முடி முடியை அடர் கருமையாக்கும் பக்கா ஹேர் டை தயார்!!

Photo of author

By Divya

White Hair Problem? 5 நிமிடத்தில் நரைத்த முடியை அடர் கருமையாக்கும் பக்கா ஹேர் டை தயார்!!

இளநரை மற்றும் முதுமை நரையை கருமையாக்க இரசாயனம் இல்லாத இந்த ஹேர் டை பயன்படுத்துங்கள்.

1)காபி தூள்
2)இலவங்கம்
3)மருதாணி பொடி
4)எலுமிச்சை சாறு
5)யூக்கலிப்டஸ் ஆயில்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு 2 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து மிதமான தீயில் தண்ணீரை கொதிக்க விடவும்.

இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் 4 அல்லது 5 இலவங்கத்தை உரலில் போட்டு இடித்து பொடியாகவும்.இந்த பொடியை கொதிக்கும் காபி நீரில் போட்டு மேலும் ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இந்த நீரை நன்கு ஆறவிட வேண்டும்.அதன் பின்னர் ஒரு இரும்பு கடையில் 2 தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து கொதிக்க வைத்த காபி தண்ணீரை ஊற்றி பேஸ்ட் போல் கலந்து விடவும்.

இந்த பேஸ்டை மூடி போட்டு ஒரு இரவு முழுவதும் இரும்பு கடாயில் ஊற விடவேண்டும்.மறுநாள் காலையில் இந்த மருதாணி பேஸ்ட்டில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் சில துளிகள் யூக்கலிப்டஸ் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் தலைக்கு குளிக்கவும்.தலையில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.அதற்காக முந்தின நாள் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி ஆரஞ்சு நிறத்திற்கு மாறும்.பின்னர் இந்த முடியை கருமையாக்க மற்றொரு பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.

1)அவுரிப்பொடி
2)தூள் உப்பு

ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அவுரிப்பொடி மற்றும் பின்ச் அளவு தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

அதன் பின்னர் ஷாம்பு பயன்படுத்தாமல் தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்வதால் தலையில் உள்ள நரை முடி அடர் கருமையாக மாறும்.இந்த ஹேர் டையை மாதத்தில் இருமுறை பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி நிரந்தமரமாக கருமையாகும்.