வெள்ளை சர்க்கரை Vs வெல்லம் Vs பனங்கற்கண்டு: சர்க்கரை நோயாளிகள் எந்த சர்க்கரை சாப்பிடலாம்!!

Photo of author

By Divya

வெள்ளை சர்க்கரை Vs வெல்லம் Vs பனங்கற்கண்டு: சர்க்கரை நோயாளிகள் எந்த சர்க்கரை சாப்பிடலாம்!!

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் அறுசுவைகளில் முதன்மை இடத்தில் இருப்பது இனிப்பு.சர்க்கரை,வெல்லம்,பழங்கள் போன்றவற்றில் அதிகளவு இனிப்பு சுவை நிறைந்திருக்கின்றது.டீ,காபி,பால்,ஹல்வா,பால்கோவா,கேசரி,பாயாசம்,பொங்கல் போன்றவற்றில் இனிப்பு கலந்து சுவைக்கும் உங்களில் பலருக்கு வெள்ளை சர்க்கரை,வெல்லம்,பனங்கற்கண்டு போன்ற பொருட்களில் எது உடலுக்கு நல்லது என்று தெரிய வாய்ப்பு குறைவு.

கரும்பு சாற்றில் வெல்லம் மற்றும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.அதேபோல் பனைமரத்தில் இருந்து கிடைக்க கூடிய பதனியில் இருந்து பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது.

வெல்லம்

கருப்பு சாற்றை கொதிக்க வைத்து அச்சில் ஊற்றி பல வகைகளில் வெல்லம் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே.எந்த ஒரு வேதிப்பொருட்களும் கலக்கப்படாததால் வெல்லம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது.ஆனால் உண்மையில் நாம் நல்லது என்று நினைக்கும் வெல்லத்தில் பல கலப்படங்கள் நிகழ்கிறது.

சந்தையில் மஞ்சள்,ஆரஞ்சு,அடர் பழுப்பு,வெளிர் பழுப்பு என்று பல நிறங்களில் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது.இதில் ஆரஞ்சு,மஞ்சள்,வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடிய வெல்லத்தில் அதிகளவு சர்க்கரை கலந்து தயாரித்து விற்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.மக்களை கவருவதற்காக வெல்லத்தில் சோடியம் ஹைடிரோ சல்பேட்,சூப்பர் பாஸ்பேட்,சோடியம் பார்முலேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது.

சிலர் வெல்லத்தில் லாபம் பார்க்க வேண்டுமென்ற நோக்கில் மைதா,சர்க்கரை போன்ற பொருட்களை கலந்து வெல்லத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

வெல்லத்தை தொட்டால் மாவு போன்று உதிர வேண்டும்.அடர் பழுப்பு நிறத்தில் காணப்பட்டால் அது கலப்படம் இல்லாத வெல்லமாகும்.வெல்லத்தில் குறைவான அளவு சுக்ரோஸ் இருப்பதால் இது சர்க்கரையை காட்டிலும் அதிக பாதிப்பு இல்லாத ஒரு இனிப்பு பொருளாகும்.ஆனால் கருப்பு சாற்றை காய்ச்சும் பொழுது அதில் இருந்து உருவாகும் அழுக்கை வெளியேற்ற பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானால் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

நீங்கள் வாங்கும் வெல்லம் கலப்படமானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் டார்ச்சில் அந்த வெல்லத்தை வைக்கவும்.டார்ச் ஒளி வெல்லம் முழுவதும் ஊடுருவினால் அது கலப்படமான வெல்லம் என்று அர்த்தம்.அதுவே வெல்லத்தில் ஒளி ஊடுருவவில்லை என்றால் அது கலப்படமற்ற வெல்லம் என்று அர்த்தம்.

சர்க்கரை

கரும்பு சாற்றை காய்ச்சி சல்பர் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி ப்ளீச் செய்து தயாரிக்கப்படும் சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் சல்பரின் அளவு 70 PPMக்கு மேல் சென்றால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒரு பொருளாக மாறிவிடும்.

வெள்ளை சர்க்கரையில் 99% சுக்ரோஸ் நிறைந்திருப்பதால் இதை உட்கொள்ளும் பொழுது சர்க்கரை,இன்சுலின் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.வெல்லம் மற்றும் சர்க்கரை இரண்டுமே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கூட்டக் கூடியவை என்பதினால் இதனை அளவாக பயன்படுத்துவது நல்லது.

பனங்கற்கண்டு

இதில் 65% சுக்ரோஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது.பனை வெல்லத்தில் வெள்ளை திட்டுகள் தென்பட்டால் அது கலப்படமான வெல்லம் என்று அர்த்தம்.அதுவே அடர் பழுப்பு நிறத்தில் உதிரும் பதத்தில் இருந்தால் அது கலப்படமற்ற வெல்லம் என்று அர்த்தம்.

வெல்லம்,வெள்ளை சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிப்பு பொருட்களை அளவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆபத்து ஏற்படாது.இருப்பினும் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.