மஞ்சள் கறை படிந்த பற்கள் வெள்ளையாக.. டூத் பேஸ்ட்டில் இதை சேர்த்து பல் துலக்குங்கள்!!

Photo of author

By Divya

Teeth Whitening: பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட விரும்புபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)டூத் பேஸ்ட் – தேவையான அளவு
4)தூள் உப்பு – கால் தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

கிண்ணத்தில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கொட்டி கொள்ள வேண்டும்.அடுத்து தேவையான அளவு டூத் பேஸ்டை அதில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அதன் பிறகு இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் இந்த பூண்டு பேஸ்டை மஞ்சள் கலவையில் போட்டு ஒருமுறை கலக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இருந்து சாறு எடுத்து டூத் பேஸ்ட் கலவையில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 05:

அதன் பிறகு கால் தேக்கரண்டி தூள் உப்பை அதில் போட்டு நன்கு கலக்கி பிரஸில் வைத்து பற்களை துலக்கினால் பல் அழுக்கு கறை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட் – சிறிதளவு
2)பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

கிண்ணம் ஒன்றை எடுத்து நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு கால் தேக்கரண்டி பேக்கிங் சோடாவை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து நுரை வரும் வரை கலக்கி கொள்ள வேண்டும்.இந்த கலவையை பயன்படுத்தி பற்களை துலக்கினால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கிவிடும்.

உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.தினமும் காலை,இரவு என்று இரு நேரம் பல் துலக்குங்கள்.வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்பளியுங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் மஞ்சள் கறை படிவது கட்டுப்படும்.