முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது
முகத்தை வெள்ளையாக பளபளப்பாக மாற்ற கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கேழ்வரகை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் ஆழமாகச் சென்று துளைகளை சுத்தப்படுத்துகின்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும். இந்த கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
கேழ்வரகு ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்…
* கேழ்வரகு
* பால்
கேழ்வரகு ஃபேஸ் பேக் செய்யும் முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இரண்டு ஸ்பூன் கேழ்வரகு எடுத்து அதில் கேழ்வரகு மூழ்கும் அளவிற்கு பால் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை அரை மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
அரை மணி நேரம் ஊறிய பிறகு கேழ்வரகை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை நம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
அதற்கு முதலில் பஞ்சை எடுத்து பாலில் நினைத்து முகத்தை துடைக்க வேண்டும். அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள கேழ்வரகை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் இது காயும் வரை வைக்க வேண்டும். காய்ந்த பின்னர் இதை ஈரத்துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதும். முகம் பளபளப்பாக மாறும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும் முகம் வெள்ளையாக மாறும்