இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..

0
225

இந்த வாரம் யாருக்கு லாபம்? யாருக்கு யோகம்? யாருக்கு அதிர்ஷ்டம்? உங்களின் ராசியா இது?..

 

மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் வியாபார பணிகளில் பொறுமையை கையாளுவதன் மூலம் லாபகரமான வாய்ப்புகளை உருவாக்க முடியும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான உயர்வும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உஷ்ணம் தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.இதற்கான தெய்வ வழிபாடு,முருகப்பெருமானை வழிபட நன்மை உண்டாகும்.

 

ரிஷப ராசி அன்பர்களே.. இந்த வாரம் எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் தாமதங்கள் குறையும். வியாபார பணியில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். புதிய செயல்களில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் மிதவேகம் மிக நன்று. வேலையாட்களிடம் பொறுமையை கையாளுவது நல்லது. வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும்.இதற்கான தெய்வ வழிபாடு மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.மிதுன ராசி அன்பர்களே.. இந்த வாரம் தனவரவில் இருந்துவந்த தடைகள் விலகும். கனிவான பேச்சுக்கள் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.அதற்கான தெய்வ வழிபாடு ,பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

 

Previous articleஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!
Next articleஇனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here