பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம்
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகருக்கு ஆகஸ்ட்-15 சுதந்திர தினவிழாவின்போது விருதுபெற
விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு
சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகருக்கு விருது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் 15.08.2022 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம்5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல்,நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் (தமிழில் மற்றும் ஆங்கிலம் ) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet-4) தமிழ்-2, ஆங்கிலம் – 2 மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரிய முறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேற்கண்ட தகுதிகளை உடையோர் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 3-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய கருத்துருவினை 27.06.2022-க்குள் ஒப்படைத்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Comment