நமது உடலில் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்ட்டீரியா,வைரஸ் போன்ற தொற்றுகளிடம் போராடும் வேலையை நோய் எதிர்ப்பு மண்டலம் செய்கிறது.ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது பலவீனாக இருப்பவர்களுக்கு அலர்ஜி அதாவது ஒவ்வாமை ஏற்படுகிறது.அலர்ஜி பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அலர்ஜி பிரச்சனை ஏற்படுகிறது.
இப்படி உடலில் அலர்ஜி இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.தூசி,காற்று மாசுபாடு,புகை,மகரந்தம்,விலங்குகள் முடி போன்ற காரணங்களால் அலர்ஜி ஏற்படுகிறது.அதேபோல் சிலவகை உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது.
அலர்ஜியின் பொதுவான அறிகுறி தொடர் தும்மல்தான்.தும்மல் அனைவருக்கும் வரக் கூடிய ஒரு விஷயம்தான்.இருப்பினும் ஒருவர் ஒரே நேரத்தில் 10,20 முறைக்கு மேல் தும்மினால் அது அலர்ஜி பாதிப்பை குறிக்கிறது.
அலர்ஜி பாதிப்பானது நமது உடலில் எந்த உறுப்பை பாதிக்கிறதோ அதை பொறுத்துதான் அறிகுறிகள் தென்படும்.உங்களுக்கு சைனசைடிஸ் என்ற அலர்ஜி இருந்தால் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும்.அதேபோல் சரும அலர்ஜி இருந்தால் அதை எக்சிமா என்பார்கள்.ஆஸ்துமா என்ற பாதிப்பு நுரையீரல் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
உணவு சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்றால் அதை ஓரல் அலர்ஜி என்று அழைப்பார்கள்.உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவுகளை சாப்பிடும் பொழுது வயிறு வீக்கம்,குமட்டல்,தோல் அரிப்பு,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சிலருக்கு பருக காலத்தில் சளி,மூக்கடைப்பு,கண் எரிச்சல்,கண் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.எல்லா அலர்ஜி பாதிப்பிற்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதில்லை.இருப்பினும் எந்த அலர்ஜியாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சரும அலர்ஜி இருந்தால் தோல் தடிப்பு,தோல் அரிப்பு,தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் அதில் அதில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது.சில வகை உணவு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்றால் அதிலிருந்து விலகி இருப்பது நல்ல முடிவாக இருக்கும்.ஒவ்வாமை பாதிப்பு இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண்பது நல்லது.