cricket: இந்திய அணி அடுத்தததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கான அணியின் அப்டேட்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.
இந்திய அணியில் புதிதாக அணியில் நுழையும் வீரர்கள் யார் மற்றும் வெளியே இருக்க வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. அதில் விராட் மற்றும் ரோஹித் இருவரும் அணியில் இடம் பெறுவார்கள். டெஸ்ட் மற்றும் டி20 யில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வால் நிச்சயம் இந்த முறை முதல் முறையாக ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இவரை தொடர்ந்து கில் அணியில் இருப்பார்.
மேலும் ராகுல் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான்.இருந்தாலும் டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடிய காரணத்தால் அணியில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளது. ரிஷப் பண்ட் நிச்சயம் அணியில் இடம் பெறுவார். ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல், பும்ரா, சிராஜ், அஷிர் தீப் சிங் இவர்கள் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார்கள். மேலும் வருண், பிஷ்னோய், வாஷிங்டன், ஆவேஷ் கான், ரிங்கு சிங், திலக் வர்மா அணியில் இடம் பெற வாய்ப்புகள் உண்டு. ஷமி இடம் பெறுவதில் சந்தேகம் தான்.