கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!!

Photo of author

By Divya

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!!

Divya

Who is Rangaraj this month? Is he capable enough to be a judge.

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவர்கள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார்.குழந்தை நட்சத்திரமாக தோன்றி 1991 ஆம் வெளியான “நாளைய தீர்ப்பு” படத்தின் வாயிலாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் தனது அயராத உழைப்பால் மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பினார்.விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஏற்றம்,இறக்கம் இரண்டையும் கண்டு இன்று தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இவரின் இந்த வெற்றிக்கு அடிக்கல் நாட்டியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.அதேபோல் விஜய்யின் நடிகராக வேண்டும் என்ற கனவிற்கு உறுதுணையாக நின்றவர் அவரது தாய் ஷோபா.

இந்நிலையில் மனைவி ஷோபாவை இருமுறை திருமணம் செய்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.எஸ்ஏசி கிருத்துவம் மற்றும் ஷோபா இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மனைவி கமலம்,தாலி எடுத்து கொடுத்து இவர்களின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.

பிறகு நீண்ட வருடங்கள் கழித்து கிருத்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஷோபா மனதில் ஏற்படவே இதை கணவர் எஸ்ஏசியிடம் தெரிவித்து இருக்கிறார்.பின்னர் இருவரும் கிருத்துவ முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டார்.இந்த நிகழ்வு நடக்கும் பொழுது மகன் விஜய் அவர்களுக்கு வயது 6.அது மட்டுமின்றி இந்த திருமணத்தின் போது ஷோபா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேட்டியில் கூறி இருக்கிறார்.