எல்லையில் பதற்றம் யார் காரணம்? இந்தியாவா? பாகிஸ்தானா? விரிவாக அறிவோம்!

0
186

இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் கடும் போட்டி சண்டை நிலவி வருகிறது. அப்படி இருக்க இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக்கு உள்ளே உள்ள அப்பாவி குடிமக்கள் மீது இந்தியா எறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா குரேஷி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போர் வெறியால் இந்தியா அமைதியை மட்டும் சீர்குலைக்கவில்லை, கட்டுப்பாட்டு மனித உரிமை மீறல்களையும் செய்கிறது என்று அவர் இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். தற்போது நிலவும் சூழலை உன்னிப்பாக கவனிக்குமாறு சர்வதேச நாடுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயல்வதாகவும், அதற்கு ஏதுவாக இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறியுள்ள இந்திய ராணுவம், இத்தகைய சூழல்களில் பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது. என சனிக்கிழமை இரவு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleநேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!
Next article“பிகில்” செய்த சாதனை! ரிலீசுக்கு முன்னே இத்தனை கோடி வசூலா?