வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? உள்கட்சி மோதலால் கட்சி இரண்டாகப் பிரியும் வாய்ப்பு!

Photo of author

By Parthipan K

வருகிற 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, கட்சிக்குள் இழுபறி நடக்கும் சம்பவம் தற்போது இருக்கும் அமைச்சர்கள் கூறும் கருத்துக்களே சாட்சியாக இருக்கிறது.

அதிமுகவில் அதிக செல்வாக்கு பெற்றவர்களே தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் அதிமுக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் போட்டி நிலவுகிறது. இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிறகு சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அதற்கு முன்பே ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவார்.

அதன் பிறகு நடந்த அரசியல் அனைவரும் அறிந்ததே. தற்போது அதிமுகவின் கட்சிக்குள் இருவருக்குள்ளும் முதல்வர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுக்கப்படுவது பற்றி கடும் மோதல்கள் உருவாகியுள்ளது.

இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவின் எம்எல்ஏக்களே தேர்வு செய்வர் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு முரண்பாடான வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே உள்ளதால் உள்கட்சிக்குள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் செயல்படுத்தி வருகின்றன.

திமுகவில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அதிமுகவின் கட்சிக்குள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடிபழனிசாமியே தொடர்வாரா? அல்லது தேர்தல் முடிந்த பிறகு யார் என்பதை தேர்வு செய்வார்களா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள்ளேயே இழுபறிகள் நடந்து வருகின்றன.

இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக கட்சியே யாரென்பதை தேர்ந்தெடுக்கும். முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல் தேர்தலில் நிற்க முடியாது. அதனால் இதுகுறித்து கட்சியின் எம்எல்ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறியிருந்தார்.

இதன் பிறகு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகின்ற தேர்தலிலும், தற்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே என்றைக்கும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது கட்சிக்குள் இருக்கும் தமிழகத்தின் தென் மாவட்ட அமைச்சர்களுக்கும், கொங்கு பகுதியில் உள்ள அமைச்சர்களுக்கும் மாற்றுக் கருத்துகள் நிலவி வருகிறது என்பது தற்போது வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.