ரோஹித் சர்மா இல்லையென்றால் யார் அடுத்த கேப்டன்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கம்பீர்!!

Photo of author

By Vijay

cricket: இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா கலந்து கொள்ளாத பட்சத்தில் யார் அடுத்த கேப்டன் என்று அறிவித்தார் கம்பீர்.

இந்தியா நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான போட்டியில் விளையாட உள்ளது. இதில் ரோஹித் சர்மா பங்கேற்காத பட்சத்தில் யார் அடுத்த கேப்டன் என்ற கேள்விக்கு அனைவரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கம்பீர்.

இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான படுதோல்விக்கு பின் நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து உடன் ஒயிட் வாஷ் தோல்விக்கு பின் ஆஸ்திரேலியா உடன் 4 போட்டிகளில் வெற்றி  பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

இந்நிலையில் இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில், இந்திய அணி முன்னாள் வீரர்கள் முதல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால் தொடர் முழுவதும் கேப்டனாக இருக்க கூடாது என்றும், ரிஷப் பண்ட் தான் அடுத்த கேப்டன் போன்ற கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த அவர், ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத பட்சத்தில், தற்போது துணை கேப்டனாக இருப்பவர் ஜஸ்ப்ரித் பும்ரா அவர்தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறியுள்ளார்.