அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!!

Photo of author

By CineDesk

அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!!

CineDesk

Who is Trisha joining Ajith? Is it him? Major update out!!

அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!!

தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைபடத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் “விடா முயற்சி” என்னும் படம் வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவருக்கு மவுசு அதிகரித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். தளபதி வுடன் லியோ அஜித்துடன் விடா முயற்சி என்று பல்வேறு வாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆனால் தற்போது இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தமன்னாவை களமிறக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது ஜெயிலர் திரைபடத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடிகை தமன்னா கவர்ச்சியாக தனது நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனால் தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததா அல்லது நடிகை த்ரிஷா லியோ படத்தில் நடித்து வருவதால் இவரை தேர்ந்து எடுத்து உள்ளார்களா என்று பேசப்பட்டு வருகிறது.

உண்மையாக யார் தான் ஹீரோயின் என்ற தகவல் இன்னும் சில நாட்களில் படக்குழு அறிவிக்க உள்ளது. இதற்கு முன்பு 2014  ஆம் ஆண்டில் அஜித் தமன்ன ஜோடியில் வெளிவந்த வீரம் திரைப்படத்திற்கு இவர்கள் மீண்டும் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.