நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருள் நெல்லிக்காய்.சருமப் பிரச்சனை முதல் முடி சார்ந்த பாதிப்புகள் வரை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்தாக நெல்லிக்காய் திகழ்கிறது.ஆயுர்வேதத்தில் இந்த நெல்லிக்காய் பெரிதும் பயனுள்ளதாக திகழ்கிறது.
நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமப் பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.தினமும் இரண்டு பெரிய நெல்லிக்காய் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரும்.
இத்தனைவித நன்மைகள் கொண்டிருக்கும் நெல்லிக்காயில் சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது.இரத்தக் கசிதல் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.வயிற்றில் அமிலத் தன்மை பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.நெல்லிக்காயில் அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறதால் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
இருப்பினும் அதிகளவு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஜலதோஷ பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிறுநீரக எரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது.
வறண்ட சருமப் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் நெஞ்சு கரிப்பு,தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.