அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!!
முதலில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட், டி 20, ஒருநாள் போட்டி அனைத்திலும் இருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது. இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரோகித் தலைமையில் தோல்வியடைந்தது. அது பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில் கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுள்ளர்கள். இதனால் துணை கேப்டனாக ரஹானே மீண்டும் நியமிக்கப்பட்டடிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கவாஸ்கர் இந்திய அணி கேப்டன் யார் என்று தேடப்பட வேண்டும். மேலும் இளம் வீரர்களை கேப்டனாக தயார் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதனையடுத்து என்னைக் கேட்டால் கில், அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்றும் இருவரும் நன்றாக வளர்ந்து வருகிறார்கள் என்றும் கூறிருந்தார். மேலும் இருவரும் சிறந்த வீரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரோகித்சர்மா இஷான் கிஷனையும் விலக்கி வைத்து விட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் இதுவரை இந்தியா அணியின் அடுத்த கேப்டன் யார் என்று தெரியவில்லை.