இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

0
104
Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!
Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு  ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் துறை  தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சாலை பாதுகாப்பினை உறுதி செய்யவும், மோட்டார் வாகன சட்டங்களை கடுமையாக பின்பற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என  உயிரிழந்தவர்களின் சதவீதம்   அதிகமாக இருந்தது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். இந்த விதிமுறையானது இன்று திங்கள்கிழமை ஜூன் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதன் காரணமாக இன்று கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் ஹெல்மெட் அணிந்து சென்றனர். ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்த போலீசார் அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் உயிரை பாதுகாக்க ஹெல்மெட் அணிவேன் என்ற உறுதி மொழியையும் எடுக்க வைத்தனர்.

இந்த விழிப்புணர்வு ஒரு வாரம் வரை மட்டுமே வழங்கப்படும். அடுத்த வாரம் முதல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை எனில் அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகர போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை தெரிவித்தனர்.