கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

Photo of author

By Amutha

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  3-வது இறுதி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4  டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளன.

இந்நிலையில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று சென்னையில் சேப்பாக்கம் எம்ஏ .சிதம்பரம் ஸ்டேடியத்தில் பகல் இரவு ஆட்டமாக இன்று புதன்கிழமை தொடங்க இருக்கிறது.

இன்றைய ஆட்டமானது இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் கோப்பையை வெல்வது வெற்றிக்கு மட்டுமில்லாமல் ஒரு நாள் போட்டி வரிசையில் தனது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியினர் 1-2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒரு நாள் போட்டி தொடரை 2-1  என்ற கணக்கில் கட்டாயம் நன்றாக வேண்டும் என்ற நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சென்னையில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. மேலும் சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் போட்டி என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டியில் பங்கு பெறும் உத்தேச  வீரர்கள்:

இந்தியா அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா அணி:

மிட்செல் மார்ஷல், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர் அல்லது நாதன் எலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.