முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்…
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்து வணங்கியது பற்றி தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நண்பர்களுடன் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் பொழுது ஜார்கண்ட் கவர்னர், உபி முதல்வர், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த பொழுது மட்டும் அவரது காலில் விழுந்து வணங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் விமரசனத்திற்கு உள்ளான இந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களும் பரவி வருகிறது.
இதையடுத்து 12 நாள் இமயமலை பயணத்தை முடித்து விட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று(ஆகஸ்ட்21) இரவு சென்னை திரும்பினார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் “நான்கு ஆண்டுகள் கழிந்து இமயமலை சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. நான் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவதுதான் என்னுடயை பழக்கம். அதைத்தான் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த பொழுதும் நான் செய்தேன். முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்து வணங்கியதற்கு வேறு எந்தவொரு உள்நோக்கமும் இல்லை.
இமயமலை பயணத்திற்கு சென்ற பொழுது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாக சந்தித்தேன். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பமும் இல்லை. விரும்பவும் இல்லை” என்று கூறினார்.