உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் இந்த திடீர் சந்திப்பு ஏன் இன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருப்பது பேசப்பட்டு வருகிறது.
தற்போது அஇஅதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தரப்பு ஒன்று சொல்லுங்கள் தற்பொன்று இரண்டாக பிரிந்துள்ளது இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தான் அதிமுகவின் முழு அதிமுக தொண்டர்கள் முன் ஆதரவும் நிர்வாகிகளின் ஆதரவும் உள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது கொடநாடு கொலை வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரை அவர் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி உறுதியாகி உள்ளது என்பது நமக்கு தெரிய வருகிறது.
விரைவில் கட்சியை சார்ந்து முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என்பது குறித்து தொகுதி பங்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக போட்டியிடும் எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகி விடும் என்றும் யார்? யார் ? போட்டியிடுகிறார் என்ற போட்டியாளன் பெயர்கள் உட்பட அனைத்தும் டிசம்பர் மாதம் முடிவு செய்யப்படும் என அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சந்திப்பிற்கு பிறகு தகவல்கள் வெளியாகி உள்ளது.