சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன் !!
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி வானதி சீனிவாசன் பேசியதாவது,“மோடியால் தான் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.ஆனால் தமிழக முதல்வர் அடுக்கடுக்காக பொய்களை கூறி வருகிறார்.
மோடி தமிழகத்திற்கு எதிரானவர் என்று பொய் கூறி தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.அதுமட்டுமல்ல மாணவர்களின் நலனுக்காக இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், சைக்கிள் வழங்கும் திட்டம் என அதிமுக அரசில் கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்தும் திமுக அரசில் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஏழை பெண்களின் திருமணத்திற்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.
எப்போதும் சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை மட்டும் அமைச்சராக்கி உள்ளார்.அவரின் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? முதல்வர் வீட்டிலேயே சமூக நீதி இல்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.