சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

0
113
Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?
Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

அதேபோன்று, இந்த ஆண்டும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா – 2024, நவம்பர் 29-ம் தேதி முதல் துவங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை மாநகராட்சி தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது. இதனை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் அவருடன் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் அவர்களும் கலந்தது கொண்டார். ஆனால் காவல் துறை சார்பில் யாரும் கலந்தது கொள்ளவில்லை. இதற்க்கு காரணம் முறையாக எந்த ஒரு உயர் காவல் அதிகாரிகளை அழைப்பிதல் மூலம் அழைக்கவில்லை என காவல் துறை சார்பில் தெரிவிக்கபட்டத்து.

இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம், “சேலத்துக்கு என்று தனி அமைச்சர் இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரிகிறதா என்று தெரியவில்லை. சமீபத்தில் மாநகராட்சி எல்லையில் அமைச்சர் ஆய்வு செய்ய சென்றபோது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர் வரவில்லை. இந்த விஷயம் அப்போதே பெருமளவு பேசுபொருளானது. அதனைத் தொடர்ந்து இன்று புதிதாக அமைச்சராகி, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செயல்படக்கூடிய திட்டத்தில் பங்கு பெறக்கூடிய அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா… அமைச்சர் ப்ரோட்டோ காலில் இது இல்லையா?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் பேசினோம். “புத்தகத் திருவிழா தொடர்பாக நடந்த மீட்டிங்கிலேயே காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை” என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்காததால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்திலை தொடர்பு கொண்டு பேசினோம். “புத்தக விழாவிற்கு அழைப்பிதழ் ஏதும் வந்ததாக எனக்கு தெரியவில்லை” என்றார்.

Previous articleதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிய நடிகை!! இணையதளத்தில் வைரலான புகைப்படம்!! 
Next articleஇளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு தரும் ரூ15 லட்சம் மானியக் கடன்!!