Breaking News, National, Politics

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!

Photo of author

By Vijay

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!

Vijay

Button

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து சிறையில் இருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பினர், “கைது நடவடிக்கையே தவறு என்பது தான் எங்களின் நிலைப்பாடாக உள்ளது. அப்படி இருக்கும்போது ஜாமீன் எப்படி கேட்க முடியும்? எனவே தான் நாங்கள் நேரடியாக கைது நடவடிக்கையை ரத்து செய்யுங்கள், அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதை சட்டவிரோதம் என்று அறிவியுங்கள் என கேட்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் பிரிவு 19-ல் போதிய ஆதாரங்கள் இல்லாமல் என் மீது கைது நடவடிக்கை நடந்துள்ளது. முக்கிய சாட்சியங்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் என எதிலுமே எனக்கு எதிராக இல்லாத பட்சத்தில் கைது நடவடிக்கை நடந்துள்ளது. எனவே தான் என் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என்று சொல்கிறேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் பதில் அளித்துள்ளனர்.

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது!!