சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

0
212
12 people admitted to hospital after eating chicken shawarma..!!
12 people admitted to hospital after eating chicken shawarma..!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து இந்த உணவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படி உள்ள சூழலில் தற்போது சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் தான் நடந்துள்ளது. அங்குள்ள சாலையோர கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கு அடுத்தடுத்து உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாளில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இவர்கள் 12 பேரும் ஒரே கடையில் தான் சாப்பிட்டார்களா என்ற தகவல் வெளியாகவில்லை. சமீபகாலமாக சிக்கன் ஷவர்மா அனைவருக்கும் பிடித்த உணவாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை முறையாக சமைக்கவில்லை என்றால் மோசமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்.

ஷவர்மாவை பொறுத்தவரை அடுப்பில் வைத்து முறையாக சமைப்பதில்லை. ஸ்டாண்டில் வைத்து தான் சமைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவை சரியாக சமைக்கப்படாமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே தான் அதை சாப்பிடும் பலர் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அதில் பயன்படுத்தப்படும் சிக்கனின் தரம் மிக முக்கியம். கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தினால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.