குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் சளி பாதிப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாக இருக்கிறது.ஒவ்வாமை,பருவகாலம் போன்ற பல காரணங்களால் சளி தொந்தரவு ஏற்படுகிறது.சிலருக்கு தலை ஈரமாக இருந்தாலே சளி பிடிக்கும்.மழையில் நனைவது,தலையில் அதிகம் வியர்ப்பது,தலைக்கு குளித்துவிட்டு துவட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது.
உண்மையில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் என்ன காரணம் இருக்கிறது என்பதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.முதலில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.வைரஸ் தொற்று காரணமாகத் தான் சளி பிடிக்கிறது.முடி ஈரப்பதத்துடன் இருப்பதனால் சளி பிடிப்பதில்லை.
நமக்கு சளி பிடிக்க ரைனோ என்ற வைரஸ் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.இந்த ரைனோ வைரஸ் ஈரம் இருக்கும் தலைக்குள் எளிதில் சென்றுவிடும்.இவை காற்றின் மூலம் பரவும் ஒரு வைரஸாகும்.இந்த வைரஸ் நமது தலை முடிக்குள் ஊடுருவி பெருகி சளி பாதிப்பை அதிகரிக்கும்.
தலை முடி ஈரத்தினால் பரவும் இந்த வைரஸால்தான் சளி பிடிக்கின்றது தவிர வேறு எந்த உண்மை காரணமும் இல்லை.அதேபோல் தலைமுடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.இப்படி சொல்ல காரணம் இருக்கிறது.தலைமுடி அதிகமாக இருந்தால் வியர்த்து ஈரப்பதம் அதிகமாகும்.இதனால் ரைனோ வைரஸ் எளிதில் ஊடுருவி சளி பிடித்துவிடும்.இதனால் ஆண்கள் அடிக்கடி தலைமுடியை வெட்ட வேண்டும்.
தலைக்கு குளித்த பின்னர் துடைத்துக் கொள்ள வேண்டும்.வியர்வை தலையில் இருந்தால் அதன் ஈரப்பத்தால் வைரஸ் பரவி சளி பாதிப்பு ஏற்பட்டுவிடும்.தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.