நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

Photo of author

By Gayathri

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

Gayathri

இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்திரன் அவர்கள் தன்னை இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைத்து திறமைகளையும் தன்னகத்தை கொண்டுவராக திகழ்ந்தவர். 

 

ஒரு சமயம் தனக்கு மிகப்பெரிய பண தேவை இருந்தால் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினியுடன் இணைந்து வேலை பார்க்கலாம் என அவரிடம் சென்று கதை கூற, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் திரைகதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த திரைப்படத்தை நானே தயாரிக்கப் போகிறேன் என டி ராஜேந்திரன் அவர்கள் தெரிவிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மறுப்பு கூறியதோடு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நானே பார்த்து தருகிறேன் திரைப்படத்திற்கு நீங்கள் திரைக்கதை எழுதி இயக்கினால் மட்டுமே போதும் என தெரிவித்திருக்கிறார்.

 

அப்பொழுது டி ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய நிலை இதுதான் என்றும் தனக்கு பணத் தேவை இருப்பதால் திரைப்படத்தை நானே இயங்குகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு முழுவதுமாக மறுத்துவிட்டு என்று நீங்கள் பெரிய தயாரிப்பாளராக மாறுகிறிர்களோ அன்று உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். மிகப்பெரிய பண தேவையில் இருந்த டி ராஜேந்திரன் அவர்கள் வேறு வழி இன்றி அந்த திரைப்படத்திற்கு தானே கதாநாயகனாகவும் இயக்குனராகவும தயாரிப்பாளராகவும் மாறி மிகப்பெரிய பிளாக் மாஸ்டர் திரைப்படமாக திரைப்படத்தை கொடுத்தார்.

 

அந்த திரைப்படம் தான் உயிருள்ளவரை 1983 ஆம் ஆண்டு வெளியானது திரைப்படத்தோடு நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வெளியானது ஆனால் அவருடைய துடிக்கும் கரங்கள் படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை ஆனால் உயிருள்ளவரை உஷா திரைப்படமானது தமிழில் மட்டும் வெற்றி தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.