ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு அலசல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருது சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தபோது, திரையுலகைச் சேர்ந்த பலர் பாராட்டினாலும் அரசியல்வாதிகள் சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து எதிர்ப்பு தெரிவித்தனர்
ரஜினிகாந்த் பாஜகவின் முகமாக இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பதாகவும், ரஜினியின் பிரபலத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே இந்த விருதை கொடுத்து அவரை தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் கூறிவருகின்றனர்
இதே மத்திய அரசு கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் பத்மவிபூஷன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது. அப்பொழுது எந்த திரையுலகினரும் எந்த அரசியல்வாதியும் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆனால் தற்போது மட்டும் ஐகான் விருது பெறும்போது எதிர்ப்பு தெரிவித்து இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது
ரஜினிகந்த் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளதால் தான் இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினியின் அரசியல் அறிவிப்பு இல்லாமல் இருந்திருந்தால் எந்த அரசியல்வாதியும் இந்த விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது
இந்த விருதை கமலுக்கு கொடுத்திருக்கலாம் கமலை விட ரஜினிகாந்த் என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். ஐகான் விருது என்பது உலகப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு கொடுக்கும் விருது. இன்று உலக அளவில் பிரபலமாக இருப்பது ரஜினியா? கமலா? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் ஒரு சின்ன குழந்தையை கேட்டால் கூட ரஜினிகாந்த் என்று தான் பதில் சொல்லும்
உலகின் சிறந்த நடிகர் என்ற விருது என்றால் கமலுக்கு தாராளமாக கொடுக்கலாம் ஆனால் உலகின் மிகவும் பிரபலமான பிரபலமானவர் என்ற ஐகான் விருது ரஜினிக்கு கொடுப்பது பொருத்தமானதுதான் என்பதே நடுநிலையாளர்களின் பதில். அரசியல் கண்ணாடி இன்றி இந்த விருதை பார்த்தால் கண்டிப்பாக இந்த விருதுக்கு ரஜினிகாந்த் பொருத்தமானதுதான் என்பது அனைவருக்கும் புரியும்